நெல்லை: இறந்துவிட்டதாக நாடகமாடி கள்ளக்காதலியுடன் வாழ்ந்த வாலிபர்...!


நெல்லை: இறந்துவிட்டதாக நாடகமாடி கள்ளக்காதலியுடன் வாழ்ந்த வாலிபர்...!
x
தினத்தந்தி 10 April 2022 4:00 PM IST (Updated: 10 April 2022 4:06 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே இறந்துவிட்டதாக நாடகமாடி கள்ளக்காதலியுடன் வாழ்ந்து வந்த வாலிபரை போலீசார் மீட்டு உள்ளனர்.

திசையன்விளை, 

நெல்லை மாவட்டம் உவரி அருகே வல்லான் விளையை சேர்ந்த தில்லை பாண்டி மகன் பவித்திரன் (வயது 25) எலக்ட்ரீசியன். இவர் கடந்த மாதம் கடலில் மீன்பிடித்து வருவதாக வீட்டில் தெரிவித்துவிட்டு சென்று உள்ளார். ஆனால் பவித்திரன் வெகு நாளாகியும் வீடு திரும்பவில்லை. 

இதனால் அதிர்ச்சி அடைந்த பவித்திரன் உறுவினர்கள் பல இடங்களில் அவரை தேடி பார்த்து உள்ளனர்.  ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பவித்திரன் அணிந்திருந்த உடைகள், காலணிகள் கடற்கரையில் கிடந்தது உள்ளது. இதனால் பவித்திரன் கடலில் முழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

மேலும் இதுகுறித்து பவித்திரன் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் உவரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக எந்த தகவலும் கிடைக்காமல் போலீசார் திணறி வந்தனர். 

இந்த நிலையில், ராமன்குடியை சேர்ந்த சதீஷ் என்பவர் மனைவி சாந்தி (29) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உறவினர் வீட்டுக்கு செல்வதாக தெரிவித்து சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என்று சாந்தியின் தாயார் உவரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து உள்ளனர்.

இரண்டு பேர் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசாரும் ஒரு புறம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 6-ம் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த கார் திருட்டு போய்விட்டதாக பவித்திரனின் தந்தை தில்லை பாண்டி உவரி போலீசில் புகார் செய்தார்.

இது குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருட்டு போன கார் கோவை மாவட்டம் உழுந்தூர்பேட்டையில் வைத்து போலீசார் பறிமுதல் செய்தனர். அப்போது காரை ஓட்டிவந்த டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து உள்ளது. 

இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,

உவரி போலீசாரிடம் தில்லை பாண்டி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் காரை திருடி சென்றவரை கோவையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தது.

இறந்துவிட்டதாக கருதப்பட்ட தில்லை பாண்டி மகன் பவித்திரன் காரை திருடிச் சென்று மாயமான சாந்தியுடன் தங்கியிருந்து உள்ளார். பின்னர் இருவரையும் மீட்டு பவித்திரனை அவரது தந்தையிடமும், சாந்தியை அவரது தாயிடமும் அனுப்பி வைத்தனர். 

இறந்தது போல் நாடகமாடி சாந்தியுடன் பவித்திரன் வாழ்ந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்து உள்ளது . இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Next Story