கூடலூர் அருகே ஊருக்குள் வரும் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி


கூடலூர் அருகே ஊருக்குள் வரும் காட்டு யானையால் பொதுமக்கள் பீதி
x
தினத்தந்தி 10 April 2022 4:36 PM IST (Updated: 10 April 2022 4:36 PM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே வனப்பகுதியில் உணவு மற்றும் நீர் தட்டுப்பாட்டல் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது.

நீலகிரி:

கூடலூர் பகுதியில் கோடை காலமாக உள்ளதால் வனப்பகுதியில் பசுந்தீவன மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. 

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு முக்கிய சாலைகள் வழியாக திடீரென நடந்து வருகிறது. இதன் காரணமாக விவசாயிகள், மாணவ- மாணவிகள் உள்பட பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பீதியுடன் சாலையில் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது. சில சமயங்களில் பொது மக்களின் வீடுகளை முற்றுகையிடுவதால் காட்டு யானை குறித்த பீதியுடன் பொதுமக்கள் இருக்க வேண்டிய சூழ்நிலை காணப்படுகிறது.

தொடர்ந்து வாழை, பாக்கு உள்ளிட்ட விவசாயப் பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து வனத்துறையினரும் காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் சில மணி நேரத்திலேயே மீண்டும் ஊருக்குள் வந்து விடுகிறது. எனவே காட்டு யானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சில வாரங்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனத்துறையினர் கும்கி யானைகள் மூலம் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக காட்டு யானைகள் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது வனப்பகுதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மீண்டும் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. எனவே வனப்பகுதியில் காட்டு யானைகளுக்கு பிடித்தமான பசுந்தீவனங்களை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

Next Story