மத்திய மந்திரி அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - அமைச்சர் மனோ தங்கராஜ்
மத்திய மந்திரி அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்தியைத்தான் ஆங்கிலத்துக்கு மாற்றாக கருத வேண்டும். உள்ளூர் மொழிகளை அல்ல. இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், ஹிந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மனோ தங்கராஜ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளாதவது: -
“அரசியல் சாசனத்திற்கு எதிராக பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அரசியல் சாசனத்திக்கு எதிரான கருத்துக்களை ஒரு மத்திய மந்திரி பேசுவதை ஏற்று கொள்ள முடியாது. ஒரு மொழி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இந்தியை திணிப்பதற்கு தமிழ்நாட்டில் ஆதரவு கிடையாது” என்று தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story