இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் மத்திய மந்திரி அமித்ஷாவுக்குப் போதுமா? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி


இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் மத்திய மந்திரி அமித்ஷாவுக்குப் போதுமா? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 10 April 2022 9:36 PM IST (Updated: 10 April 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் மத்திய மந்திரி அமித்ஷாவுக்குப் போதுமா என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

செங்கல்பட்டு, மறைமலைநகரில் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியை மட்டுமே பேச வேண்டும் என்று கூறுகிறார் மத்திய மந்திரி அமித்ஷா. இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? இன்று இந்த கேள்வியை அனைவரும் கேட்கத் தொடங்கிவிட்டனர்

இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்குப் போதுமா?

இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் தானா?. எங்கள் மொழிக்கும் பண்பாட்டிற்கும் தனித்துவம் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story