கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா
புதுவை கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
புதுவை கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா வருகிற 14-ந் தேதி நடக்கிறது.
குருப்பெயர்ச்சி
உலகை காக்கும் பரம்பொருளான நவக்கிரகங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் தான் ஒவ்வொரு நாளும் இயங்குகின்றன. இதில் ராகு-கேது, குரு, சனி ஆகிய கிரகங்கள் மட்டுமே அடிக்கடி இடப்பெயரும் தன்மை கொண்டவை ஆகும்.
நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கும் புதுவை கருவடிக்குப்பம் சித்தானந்தர் கோவிலில் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் நிகழ்வு குருப்பெயர்ச்சி விழாவாக கொண்டாடப்படுகிறது.
குருபகவான் வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) கும்ப ராசியிலிருந்து மீனராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
13-ந்தேதி இரவு 10 மணிக்கு கலச பிரதிஷ்டையும், 14-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு குருபகவானுக்கு மகா அபிஷேகமும், காலை 4.16 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது.
பரிகார பூஜைகள்
குருபெயர்ச்சியை முன்னிட்டு புதுவையில் உள்ள வேதபுரீஸ்வரர், வில்லியனூர் திருக்காமீசுவரர், பாகூர் மூலநாதர், திருவண்டார் கோவில் பஞ்சநாதீஸ்வரர், மொரட்டாண்டி உள்பட அனைத்து கோவில்களிலும் குருபகவானுக்கு மகா யாகமும், தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார பூஜை நடைபெறுகிறது.
புதுவை இடையார்பாளையம் நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள ஆதி சொர்ணபைரவர் கோவிலில் பரிகார சாந்தி, துர்கா கணபதி ஹோம வழிபாடு அதிகாலையில் தொடங்குகிறது. தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்காரத்துடன் வழிபாடு நடக்கிறது.
Related Tags :
Next Story