ஓசூர் அருகே பாரம்பரிய எருது விடும் விழா - ஆயிரக்கணக்கானோர் கண்டுகளிப்பு
எருதுவிடும் விழாவைக் காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தாசனபுரத்தில் அமைந்துள்ள வெங்கடரமண சாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அங்கு பாரம்பரிய எருது விடும் விழா நடத்தப்பட்டது.
இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகளும், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இந்த எருதுவிடும் விழாவைக் காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். மேலும் கோவில் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்காக சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.
Related Tags :
Next Story