கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புதுவை பாரதி பூங்கா, கடற்கரையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
புதுவை பாரதி பூங்கா, கடற்கரையில் இன்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள்
புதுச்சேரிக்கு வார இறுதி நாட்களில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இன்று விடுமுறை தினம் என்பதால் சென்னை, ஐதராபாத், பெங்களூரு உள்பட வெளியூர்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் பகல் நேரத்தில் விடுதி அறைகளிலேயே முடங்கினர். எப்போதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்படும், புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதி நேற்று பகல் நேரத்திலேயே வெறிச்சோடி காணப்பட்டது.
வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க உள்ளூர்வாசிகள், சுற்றுலா பயணிகள் பாரதி பூங்கா, தாவரவியல் பூங்காவில் தஞ்சம் அடைந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
இன்று மாலையில் புதுச்சேரி கடற்கரை, நோணாங்குப்பம் படகு குழாம், மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், பாண்டி மெரினா பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள், மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
புதுச்சேரி பழைய துறைமுகம் மற்றும் தலைமை செயலகம் அருகே உருவாகியுள்ள செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.
சண்டே மார்க்கெட்
புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் காலை முதல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் அது மேலும் அதிகரித்தது. அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை பேரம் பேசி வாங்கிச் சென்றனர்.
Related Tags :
Next Story