வரத்து குறைவு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்தது
வரத்து குறைவு எதிரொலியால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்தது. வரும் நாட்களில் விலை இன்னும் உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சென்னை,
கடந்த மாதம் காய்கறி விலை குறைந்தே காணப்பட்டது. இதனால் மூட்டை மூட்டைகளாக காய்கறி சாலையில் கொட்டப்படும் நிகழ்வுகளும் அரங்கேறின. குறிப்பாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெருமளவு காய்கறி குப்பை கிடங்கில் கொட்டப்பட்டது.
தற்போது காய்கறி வரத்து குறைய தொடங்கி இருப்பதால், காய்கறி விலை லேசாக அதிகரித்து உள்ளன. வரும் நாட்களில் இது இன்னும் உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் அப்துல் காதர் கூறியதாவது:-
சரக்கு வரத்து குறைவு
தற்போது கோடை காலம் என்பதால் வரத்து சற்று குறைந்திருக்கிறது. இதனால் சில காய்கறி விலை லேசாக உயர்ந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.30-க்கு விற்பனையான ஒரு கிலோ பீன்ஸ் மற்றும் அவரை தற்போது தலா ரூ.50-க்கு விற்பனை ஆகிறது.
சாம்பார் வெங்காயம் விலை ரூ.10-ம், மாலூர் கேரட், முள்ளங்கி, முட்டைகோஸ் விலை தலா ரூ.5-ம் உயர்ந்திருக்கிறது. பல்லாரி வெங்காயத்தின் விலை ரூ.3 அதிகரித்து உள்ளது.
இதுதவிர இதர காய்கறி விலையில் மாற்றம் எதுவும் இல்லை. காய்கறி வரத்து இன்னும் குறையக்கூடும். அதேவேளை வரும் நாட்களில் சுபமுகூர்த்த தினங்கள் அதிகம் இருப்பதால் தேவை காரணமாக காய்கறி விலை இன்னும் உயரவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விலை நிலவரம்
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட காய்கறி விலை (கிலோவில்) நிலவரம் வருமாறு:-
பீன்ஸ்- ரூ.50, அவரை- ரூ.50, பாகற்காய் (பன்னீர்) - ரூ.40, பாகற்காய் (பெரியது) - ரூ.35, கத்தரி-ரூ.25, வெண்டை-ரூ.40, புடலங்காய்-ரூ.40, சுரைக்காய்-ரூ.30, பீர்க்கங்காய்-ரூ.40, பச்சை மிளகாய்-ரூ.40, பீட்ரூட்-ரூ.30, கேரட் (ஊட்டி) - ரூ.40, கேரட் (மாலூர்) - ரூ.25, முள்ளங்கி- ரூ.20, முட்டைக்கோஸ்- ரூ.15, இஞ்சி- ரூ.40, சாம்பார் வெங்காயம் - ரூ.35, பல்லாரி வெங்காயம் (நாசிக்) - ரூ.20, பல்லாரி வெங்காயம் (ஆந்திரா) - ரூ.15, தக்காளி- ரூ.15 முதல் ரூ.20 வரை, சேனைக்கிழங்கு- ரூ.30, சேப்பங்கிழங்கு- ரூ.40, காலிபிளவர் (ஒன்று) - ரூ.35, முருங்கைக்காய்- ரூ.40 முதல் 50 வரை, உருளைக்கிழங்கு- ரூ.25.

Related Tags :
Next Story