தமிழக சட்டசபையில் இன்று உயர்கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம்


தமிழக சட்டசபையில் இன்று உயர்கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம்
x
தினத்தந்தி 11 April 2022 3:26 AM IST (Updated: 11 April 2022 3:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) உயர் கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் க.பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பதில் அளிக்கிறார்கள்.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18-ந் தேதி 2022-2023-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 19-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து, 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 4 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்நிலையில், துறைகள் வாரியாக மானியக் கோரிக்கைகளை, விவாதம் நடத்தி நிறைவேற்றுவதற்காக கடந்த 6-ந் தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று (திங்கட்கிழமை) உயர் கல்வி, பள்ளி கல்வித்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

உயர் கல்வி - பள்ளி கல்வி

இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியதும், முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேசுகிறார்கள். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர்கள் வெளியிடுகின்றனர்.

Next Story