நிர்வாண நிலையில் பெண் பிணம்: கொலை செய்து கிணற்றில் வீசியதாக விவசாயி பரபரப்பு வாக்குமூலம்..!


நிர்வாண நிலையில் பெண் பிணம்: கொலை செய்து கிணற்றில் வீசியதாக விவசாயி பரபரப்பு வாக்குமூலம்..!
x
தினத்தந்தி 11 April 2022 6:30 PM IST (Updated: 11 April 2022 6:30 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே சொத்துத் தகராறில் பெண்ணை கொலை செய்து கிணற்றில் வீசிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

சேலம்:

சேலம் அருகே தனது மனைவிக்கு சொத்து தராமல் ஏமாற்றியதாக தனது மைத்துனரின் இரண்டாவது மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நிர்வாண நிலையில் பெண் பிணம்

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பகடப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (வயது 42). இவரது முதல் மனைவி விஜயா (37), இரண்டாவது மனைவி செல்வராணி (35). இவருக்கு 15 வயதில் மகன் உள்ளார். 

இந்நிலையில் செல்வராணி கடந்த 31 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பி வரவில்லை. பின்னர் கடந்த 2ம் தேதி இவரது விவசாய தோட்டத்திற்க்கு அருகிலுள்ள சரவணன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் நிர்வாண நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

போலீசார் விசாரணை

இது சம்பந்தமாக வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இரந்த பெண்ணின் அண்ணன் ஆனந்த முருகன் சகோதரியின் சாவில் சந்தேகம் உள்ளதாக புகார் கொடுத்திருந்தார்.

மேலும் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று வெள்ளையூர் கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் முன்னிலையில் அசோகனின் சகோதரி கணவர் சிவராஜ் (52) சரணடைந்தார். வீரகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் கொலைக் குற்றவாளி சிவராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இது குறித்து சிவராஜ் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது ,

பரபரப்பு வாக்குமூலம்

எனது மைத்துனர் அசோகன் பூர்வீகச் சொத்தான 7 ஏக்கர் நிலத்தை இரண்டு மனைவிகளுக்கும் எழுதி வைத்துவிட்டார். எனது மனைவி ராசாத்திக்கு பூர்வீக சொத்தில் பங்கு உள்ளது என சொத்தில் பங்கு கேட்டு அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 31ஆம் தேதி இது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் செல்வராணி வீட்டை விட்டு வெளியே சென்றார். 

அப்போது இரவு நேரத்தில் செல்வராணி  தனியே நடந்து வந்து கொண்டிருந்த போது நான் வழிமறித்து தகராறு செய்தேன். அப்போது நான் குடிபோதையில் இருந்தேன். இருவருக்கும் ஏற்பட்ட வாய்தகராறில் செல்வராணி என்னை தவறாக தரக்குறைவாக பேசினார்.

இதனால் கோபம் அடைந்த நான் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து தலையில் பலமாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரது ஆடைகளை அவிழ்த்து கைகளையும் கால்களையும் கட்டி, பின் சேலையில் கல்லை கட்டி அருகில் உள்ள கிணற்றில் வீசி சென்றேன். 

நிர்வாண நிலையில் கிணற்றில் வீசினாள் பலாத்காரம் செய்து கிணற்றில் வீசியதாக நினைத்துக் கொள்வார்கள். அதனால் இவ்வாறு கிணற்றில் வீசினேன். போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். எனவே வெள்ளையூர் கிராம நிர்வாக அலுவலர் முத்தையன் முன்னிலையில் நேரில் சரணடைந்தேன் எனத் தனது வாக்குமூலத்தில் விவசாயி சிவராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story