மொத்த விற்பனைக்கு தடை விதித்ததால் எதிர்ப்பு பெரிய மார்க்கெட்டில் மீன் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம்
புதுவை பெரிய மார்க்கெட்டில் மொத்த மீன் விற்பனைக்கு தடை விதித்ததால் மீன் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
புதுவை பெரிய மார்க்கெட்டில் மொத்த மீன் விற்பனைக்கு தடை விதித்ததால் மீன் வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மொத்த விற்பனைக்கு தடை
புதுவை பெரிய மார்க்கெட்டின் ஒரு பகுதியில் மீன் மார்க்கெட்டும் செயல்பட்டு வருகிறது. பெங்களூரு உள்பட பல்வேறு பகுதியில் இருந்து மீன்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த மீன்களை அதன் உரிமையாளர்களிடம் இருந்து இங்கு வரும் 200க்கும் மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று வீதிகளிலும், வீடு வீடாகவும் சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேரு வீதி- காந்தி வீதி சந்திப்பில் மீன்களை கொண்டு வந்து கொட்ட திடீரென போலீசார் தடை விதித்தனர். இதை கண்டித்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அப்போது நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து 11-ந்தேதி முதல் பெரிய மார்க்கெட்டில் மொத்த மீன் விற்பனைக்கு தடை விதித்தும், இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடியிலேயே மொத்த வியாபாரிகள் மீன்களை விற்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
உள்ளிருப்பு போராட்டம்
அதன்படி பெரிய மார்க்கெட் பகுதிக்கு மொத்த வியாபாரிகள் மீன்களை இறக்குமதி செய்யவில்லை. இந்தநிலையில் அங்கு வந்து இருந்த அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பெரிய மார்க்கெட்டிற்கு வந்திருந்த மீன் விற்கும் பெண்கள் மார்க்கெட் பகுதியில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. வேறு ஏதேனும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய மார்க்கெட் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
Related Tags :
Next Story