கியூட் தேர்வுக்கு எதிர்ப்பு திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


கியூட் தேர்வுக்கு எதிர்ப்பு   திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 April 2022 7:41 PM IST (Updated: 11 April 2022 7:41 PM IST)
t-max-icont-min-icon

‘கியூட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர கியூட் என்ற நுழைவுத்தேர்வினை எழுத வேண்டும் என்ற முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புதுவையில் திராவிடர் மாணவர் கழகத்தினர் அண்ணா சிலை அருகே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டதுக்கு மாநில செயலாளர் பிரின்ஸ் தலைமை தாங்கினார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தொடக்க உரையாற்றினார். மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சாமிநாதன், தி.மு.க. மாணவர் அணி செயலாளர் மணிமாறன், திராவிடர் கழக தலைவர் சிவவீரமணி, விடுதலை சிறுத்தைகள் மாணவர் அமைப்பு நிர்வாகி தமிழ்வாணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் மாணவர் கழக நிர்வாகிகள் பண்பாளன், பிரபாகரன், இலக்கியா, சுபாஷ், இனியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story