கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்


கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 11 April 2022 10:56 PM IST (Updated: 11 April 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

கட்டிட தொழிலாளி மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்தவர் செல்வநாதன். இவரது மகன் சிவசக்தி (வயது 18). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று  மாலை தனது வீட்டில் இருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த கருவடிக்குகுப்பம் பகுதியை சேர்ந்த நாராயணன், பிரதீப், விக்கி ஆகிய 3 பேரும் சேர்ந்து சிவசக்தியிம் இங்கு ஏன் நிற்கிறாய் என்று கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து சிவசக்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணன் உள்பட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story