மதுபானம், இறைச்சி கடைகளை மூட உத்தரவு


மதுபானம், இறைச்சி கடைகளை மூட உத்தரவு
x
தினத்தந்தி 11 April 2022 5:35 PM GMT (Updated: 11 April 2022 5:35 PM GMT)

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 14-ந்தேதி மதுபானம், இறைச்சி கடைகளை மூட உத்தரவு

புதுவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை யூனியன் பிரதேசத்தில் வருகிற 14-ந்தேதியன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கலால்துறை துணை ஆணையர் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதியில் இயங்கி வரும் அனைத்து கள், சாராயம், பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுவிற்பனையை தடுக்கும் விதமாக வில்லியனூர், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து பகுதிகளில் தாசில்தார் சிலம்பரசன் தலைமையிலும், பாகூர், நெட்டப்பாக்கம் கொம்யூனில் தாசில்தார் மாசிலமாணி தலைமையிலும், புதுவை, உழவர்கரை நகராட்சி, அரியாங்குப்பம் கொம்யூன் பகுதியில் தாசில்தார் சிவராஜ் தலைமையிலும் கண்காணிப்பு பணியில் கலால்துறையினர் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‘மகாவீர் ஜெயந்தி தினத்தன்று புதுச்சேரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள கால்நடை அறுவை நிலையங்களும், பல்வேறு அங்காடிகளில் அமைந்துள்ள ஆடு, மாடு, பன்றி மற்றும் கோழி இறைச்சி விற்பனை நிலையங்களும், மீன் கடைகளும் திறக்க தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story