பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை
புதுவை மாநிலத்தில் அமல்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஸ்மிதா தலைமையில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
வருகிற ஜூலை மாதம் 1-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் 15 பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பிளாஸ்டிக் பைகள், குவளைகள், தட்டுகள், கொடிகள், ஸ்ட்ரா, விரிப்பான்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்களுக்கு தடை உள்ளது.
இந்த தடை ஆணையை புதுவை மாநிலத்தில் அமல்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஸ்மிதா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. சுற்றுச்சூழல் சீனியர் என்ஜினீயர் ரமேஷ் தடை ஆணை குறித்து படக்காட்சியுடன் விளக்கினார்.
கூட்டத்தில் உள்ளாட்சித்துறை இயக்குனர் ரவிதீப்சிங் சாகர், புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் ரமேஷ், ஜெயக்குமார், கார்த்திகேயன், பாலன், இளமுருகன், காரைக்கால் நகராட்சி ஆணையர் லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டை தீவிரமாக கண்காணித்து அவற்றை தடை செய்வது, அனைத்து நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் மாற்றுப்பொருள் அங்காடி வைப்பது, சுய உதவிக்குழுக்கள் மூலம் மாற்று பொருட்களை உற்பத்தி செய்ய ஊக்குவிப்பது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது.
Related Tags :
Next Story