போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய ரவுடி தவறி விழுந்து கால் முறிவு


போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய ரவுடி தவறி விழுந்து கால் முறிவு
x
தினத்தந்தி 12 April 2022 8:46 AM IST (Updated: 12 April 2022 8:46 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அருகே பிரபல ரவுடியை போலீசார் பிடிக்க முயற்சித்த போது தவறி விழுந்ததில் கால் முறிந்தது.

சேலம்:

சேலம், மேட்டூர் அருகே உள்ள சாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் கார்த்திக் (வயது 27). இவர் மீது வழிப்பறி, கஞ்சா விற்பனை, கொலை முயற்சி உட்பட 7 வழக்குகள் உள்ளது. போலீசாரின் ரவுடி பட்டியலில் கார்த்திக் இடம் பெற்றுள்ளார்.

இந்த வழக்கு சம்பந்தமாக கருமலைக்கூடல் போலீசார் கார்த்திகை தேடிவந்த நிலையில், மேட்டூர் சிட்கோ பகுதியில் கார்த்திக் பதுங்கி இருப்பதை அறிந்த கருமலைக்கூடல் போலீசார் பிடிக்க முற்பட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக கார்த்திக் தப்பி ஓட முயன்றபோது மேம்பாலத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததில் கார்த்திக்கின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

கருமலைக்கூடல் போலீசார் கார்த்திகை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் .


Next Story