மாமியார் திட்டியதால் பச்சிளம் குழந்தையின் தாய் தற்கொலை..!


மாமியார் திட்டியதால் பச்சிளம் குழந்தையின் தாய் தற்கொலை..!
x
தினத்தந்தி 12 April 2022 12:41 PM IST (Updated: 12 April 2022 12:41 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே மாமியார் திட்டியதால் மனமுடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலுர்:

கடலூர் மாவட்டம், கண்டம்தான் கிராமத்தில் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கும் பெண்ணாடம் அருகே உள்ள துறையூர் சேர்ந்த கிருஷ்ணவேணி (21)க்கும் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. 

கிருஷ்ணவேணியின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவரது மாமியார் கிருஷ்ணவேணியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்துள்ள அவர் அதே கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான சுமார் 45அடி ஆழம் உள்ள தண்ணீர் நிரம்பிய கிணற்றில் குதித்துள்ளர்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் திட்டக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர் கிருஷ்ணவேணியை இறந்த நிலையில் மீட்டுள்ளனர். 

இதுகுறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மாமியார் திட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .


Next Story