ஆண்டுக்கு இருமுறை வணிக திருவிழா நேரு வீதி வணிகர்கள் சங்கம் கோரிக்கை
ஆண்டுக்கு இருமுறை வணிக திருவிழா நடத்த வேண்டும் என நேரு வீதி வணிகர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி
நேரு வீதி வணிகர்கள் சங்க 2-ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வள்ளலார் சாலையில் உள்ள ரியா ஹாலில் நடந்தது. கூட்டத்தில் சங்க தலைவர் நமச்சிவாயம், துணைத்தலைவர்கள், செயலாளர், பொருளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள், நேரு வீதி வணிகர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நேரு வீதி வணிகர்களின் வியாபார வளர்ச்சிக்கான ஆலோசனைகளை நிர்வாகிகள் வழங்கினார்கள். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
*வணிக திருவிழாவை ஆண்டுக்கு 2 முறை நடத்த காலதாமதமின்றி அனுமதி வழங்க அனைத்து அதிகாரிகளுக்கும், முதல்-அமைச்சர் உத்தரவிடவேண்டும்.
*இனிவரும் காலங்களில் நேரு வீதியில் தார் சாலை அமைக்கும்போது பழைய தார் சாலையை சுரண்டி எடுத்துவிட்டு உயரம் அதிகரிக்காமல் அமைக்க அரசு ஏற்பாடு செய்து தரவேண்டும்.
*நேரு வீதியில் உள்ள பிளாட்பாரத்தை சரிசெய்து கழிவுநீர், மழைநீர், வடிகால், பாதாள சாக்கடை ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
*பண்டிகை காலங்களில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை நேரு வீதியில் ஆங்காங்கே ஏற்படுத்தி தரவேண்டும்.
*வீட்டுவரி, மின்சாரவரி, தொழிலாளர் உரிமம், ஜி.எஸ்.டி. போன்றவை ஆன்லைனில் புதுப்பிக்கப்படுவதுபோல் நேரு வீதி வணிகர்கள் டிரேட் லைசென்சு ஆன்லைனில் புதுப்பித்துக்கொள்ளவும், அவ்வாறு புதுப்பிக்கும்பட்சத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வணிகர்களை பாதிக்காத வகையில் வணிக உரிமங்களை புதுப்பித்துக்கொள்ள அரசை கேட்டுக்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story