மண்ணாடிப்பட்டு சமுதாய கூடத்தில் உணவு கண்காட்சி


மண்ணாடிப்பட்டு சமுதாய கூடத்தில் உணவு கண்காட்சி
x
தினத்தந்தி 12 April 2022 11:26 PM IST (Updated: 12 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

மண்ணாடிப்பட்டு சமுதாய கூடத்தில் உணவு கண்காட்சி திருவிழா இன்று நடந்தது

புதுச்சேரி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல இயக்குனரகம் சார்பில் மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்தில் சுகாதார திருவிழா இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் வல்லவன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு முன்னிலை வகித்தார். விழாவை அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து, உணவு கண்காட்சியை பார்வையிட்டார். விழாவில் அவர் பேசுகையில், மத்திய அரசின் 23 விதமான திட்டங்கள் புதுவை சுகாதாரதுறை மூலமாக செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டங்கள் உரிய காலத்தில் மக்களை சென்றடைய அரசு பாடுபட்டு வருகிறது. சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டதால் கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரி மாறியுள்ளது என்றார்.
விழாவில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story