விவசாயிக்கு உடனடியாக பணம் பட்டுவாடா
பா.ம.க.வினர் போராட்டம் நடத்த முயன்றதால் விவசாயிக்கு உடனடியாக ரூ.64 ஆயிரம் உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டது
திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டுவரும் விலை பொருட்களை உடனடியாக பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து நேற்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களை திருக்கனூர் போலீசார் சமாதானம் செய்தனர். இதற்கிடையே இன்று விவசாயிகளுக்கு பணம் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து புகார் வந்ததை தொடர்ந்து பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி தலைமையில் மாநில தொழிற்சங்க தலைவர் சிவா, தொழிற்சங்க துணை செயலாளர் அச்சுதன், உழவர் பேரியக்க சீதாராமன், மண்ணாடிப்பட்டு தொகுதி தலைவர் ஏழுமலை, தொகுதி செயலாளர் தேவராசு உட்பட பா.ம.க.வினர் ஏராளமானோர் இன்று கூனிச்சம்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் ஒழுங்குமுறை விற்பனை கூட சூப்பிரண்டு பழனிராஜாவிடம் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் பணம் தராமல் இழுத்தடிப்பது ஏன் என கேட்டனர். மேலும் விவசாயிகளுக்கு உடனடியாக பணம் பட்டுவாடா செய்ய செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபட போவதாக எச்சரித்தனர்.
இதைத்தொடர்ந்து பா.ம.க.வினர் கொடுத்த அழுத்தம் காரணமாக விவசாயி ஒருவருக்கு ரூ.64 ஆயிரம் உடனடியாக பட்டுவாடா செய்யப்பட்டது. இருப்பினும் விவசாயிகளுக்கு பணப்பட்டுவாடா செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டால் பெரியஅளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.
Related Tags :
Next Story