வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே சேவைகள் பெறும் வசதி
வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே இணையதளம் மூலம் பழகுனர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட சேவைகளை பெறும் வசதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை,
2021-22-ம் ஆண்டுக்கான மானிய கோரிக்கையில் ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக பயன்படுத்தி பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே நேரடி தொடர்பு இல்லாத போக்குவரத்து சேவைகளான பழகுனர் உரிமம் பெறுதல், ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் ஓட்டுனர் உரிமத்தில் முகவரி மாற்றம் ஆகிய சேவைகள் வழங்குவது நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பழகுனர் ஓட்டுனர் உரிமத்தை பெறுதல், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பித்தல் மற்றும் ஓட்டுனர் உரிமத்தில் முகவரியை மாற்றுதல் ஆகியவற்றை பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வராமலேயே www.parivahan.gov.in என்ற இணையதளம் வாயிலாக சேவையை பெறும் வசதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் நேற்றுதொடங்கி வைத்தார்.
நேரில் வரும் சிரமம் குறையும்
இதன் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் சேவை எளிமையாகவும், வெளிப்படைத்தன்மையுடன் விரைவாகவும் செயல்படுத்தப்படுவதோடு, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் நேரில் வரும் சிரமம் குறையும்.
இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போக்குவரத்து ஆணையர் எஸ்.நடராசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story