காண்டிராக்டரை வெட்டிக்கொன்ற வழக்கில் பிரபல ரவுடிக்கு தூக்கு தண்டனை
காண்டிராக்டரை வெட்டிக்கொன்ற வழக்கில் பிரபல ரவுடிக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் சென்னியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் செந்தில்நாதன்(வயது 23). பார் காண்டிராக்டரான இவர், கடந்த 2013-ம் ஆண்டு திப்பிராஜபுரம் அருகே உள்ள மாடாகுடி பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து பட்டீஸ்வரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த கூலிப்படை தலைவனான ராஜா என்கிற கட்டை ராஜா(41) தனது கூட்டாளிகளான மாரியப்பன், மனோகரன் மற்றும் ஆறுமுகம்(55), செல்வம்(37) ஆகியோருடன் சேர்ந்து கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக செந்தில்நாதனை வெட்டிக்கொன்றது தெரிய வந்தது.
வழக்கில் தீர்ப்பு
இதனையடுத்து கட்டை ராஜா உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே கடந்த 2015-ம் ஆண்டு மனோகரனும், 2016-ம் ஆண்டு மாரியப்பனும் இறந்து விட்டனர்.
இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜா என்கிற கட்டை ராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் வாதி, பிரதிவாதி, விசாரணை அதிகாரி, சாட்சியங்கள் உள்ளிட்ட அனைவரிடமும் நீதிபதிகள் விசாரணை நடத்தி முடித்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.
இதற்காக காலை 10 மணிக்கு குற்றவாளிகளான ராஜா என்கிற கட்டை ராஜா, ஆறுமுகம், செல்வம் ஆகியோரை போலீசார் கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
பிரபல ரவுடிக்கு தூக்கு தண்டனை
கோர்ட்டு தொடங்கியதும் நீதிபதி பெஞ்சமின் ஜோசப் தனது தீர்ப்பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பில், இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜா என்கிற கட்டை ராஜா தனது கூட்டாளிகளுடன் இணைந்து செந்தில்நாதனை முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொன்று இருப்பது நடந்து முடிந்த விசாரணையில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டை ராஜா மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே முக்கிய குற்றவாளியான கட்டை ராஜாவை சாகும்வரை தூக்கிலிட உத்தரவிடுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.
இரட்டை ஆயுள் தண்டனை
மேலும் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஆறுமுகம் மற்றும் செல்வம் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு அழைத்துச்சென்றனர்.
14 கொலை வழக்குகளில் தொடர்பு
பார் ஒப்பந்ததாரர் செந்தில்நாதன் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கட்டை ராஜா மீது பல்வேறு வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. 14 கொலை வழக்குகள் மற்றும் 3 கொலை முயற்சி வழக்குகளில் கட்டை ராஜாவுக்கு தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
100 ஆண்டு கால வரலாற்றில் முதல் தூக்கு தண்டனை
செந்தில்நாதன் கொலை வழக்கு விசாரணை நடந்து வந்த கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 100 ஆண்டு காலம் பழமைவாய்ந்ததாகும். கடந்த 100 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகளில் பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் யாருக்கும் இதுவரை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது இல்லை. கும்பகோணம் கோர்ட்டு வரலாற்றில் முதன்முறையாக கொலை குற்றவாளியான கட்டை ராஜாவுக்கு சாகும்வரை தூக்கிலிட நீதிபதி வழங்கிய தீர்ப்பு கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story