மீனாட்சி திருக்கல்யாண வைபவம்: திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப் பெருமான் தெய்வானையுடன் இன்று புறப்பாடு
மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தில் முருகப் பெருமான் தெய்வானையுடன் இன்று புறப்பாடு, தாரைவார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் உடன் செல்கிறார்.
திருப்பரங்குன்றம்:
மதுரையில் நடைபெறும் புட்டுத் திருவிழா மற்றும் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாண வைபவம் ஆகிய இரண்டு திருவிழாவிற்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப் பெருமான் தெய்வானையுடன் மதுரைக்குச் செல்வது வழக்கம். தற்போது மதுரையில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நாளை நடைபெற உள்ளது.
இதில் பெற்றோரின் திருமணத்தில் பங்கேற்க திருப்பரங்குன்றத்தில் இருந்து முருகப் பெருமான் தெய்வானையுடன் இன்று மாலை புறப்படுகிறார். அவருடன் பவளக்கனிவாய் பெருமாள் மீனாட்சி அம்மன் சொக்கநாதருக்கு தாரைவார்த்துக் கொடுக்க உடன் செல்கிறார்.
வழிநெடுகிலும் பக்தர்கள் திருக்கண் அமைத்து சுவாமியை தரிசனம் செய்வார்கள். மதுரைக்கு செல்லும் முருகப்பெருமான் வருகின்ற 17 ஆம் தேதி வரை ஆவணி மூல வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பதினேழாம் தேதி மாலை பூப்பல்லக்கில் மதுரையில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு புறப்பாடு ஆவார் விழா ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story