திண்டுக்கல்: யானை மிதித்ததில் வன தடுப்பு காவலர் பலி


திண்டுக்கல்: யானை மிதித்ததில் வன தடுப்பு காவலர் பலி
x
தினத்தந்தி 13 April 2022 12:39 PM IST (Updated: 13 April 2022 12:41 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே காட்டு யானையை விரட்ட சென்ற வனதடுப்பு காவலரை யானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தின் கன்னிவாடி வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து அங்குள்ள தோட்டத்திற்க்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து தகவலறிந்த வனச்சரக அலுவலர்கள் நேற்று இரவு பண்ணப்பட்டி கோம்பை பகுதியில் யானைகளை விரட்ட சென்றனர்.  அப்போது மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. 

இந்நிலையில் காலை 5.30 மணியளவில் விரட்டிய யானைகள் திரும்ப வந்துள்ளது. அப்போது அங்கு பணியாற்றி வந்த வனச்சரக தடுப்பு காவலர் சுந்தரம் என்பரை யானை மிதித்து கொன்றது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கன்னிவாடி வனச்சரக அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story