புதுக்கோட்டை: ராப்பூசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 40 பேர் காயம்...!


புதுக்கோட்டை: ராப்பூசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 40 பேர் காயம்...!
x
தினத்தந்தி 13 April 2022 5:30 PM IST (Updated: 13 April 2022 5:27 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை ராப்பூசலில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 40 பேர் காயமடைந்தனர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டையை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ராப்பூசல் முனியாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு இன்று நடந்தது. போட்டியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்  எம்.எல்.ஏ. கொடியசைத்து துவங்கி வைத்தார்.

இதில் புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி,  சிவகங்கை, கரூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்டிருந்த 940 காளைகளும்,160 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர்.

மாடுகளை கால்நடை மருத்துவ குழுவினரும், மாடுபிடி வீரர்களை மருத்துவ குழுவினரும் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர்.

பின்னர் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடாப்பட்டன.இதில் சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். 

அப்போது பெரும்பாலான காளைகளை வீரர்கள் அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசின. இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் சைக்கிள், தங்க நாணயம், வெள்ளி நாணயம், டிவி, கட்டில், மெத்தை, பிளாஸ்டிக் சேர், குடம், டேபிள் பேன், சீலிங்பேன், குக்கர், அரிசி சிப்பம், உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. 

Next Story