நடுரோட்டில் மோதிக் கொண்ட பள்ளி மாணவர்களால் பரபரப்பு...!


நடுரோட்டில்  மோதிக் கொண்ட பள்ளி மாணவர்களால் பரபரப்பு...!
x
தினத்தந்தி 13 April 2022 6:30 PM IST (Updated: 13 April 2022 6:24 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் பள்ளி மாணவர்கள் நடுரோட்டில் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் தேர்வுகள் நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் தேர்வுகள் முடிந்ததும் இன்று மதியத்துடன் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளியில் இருந்து மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வெளியே வந்தனர். 

அப்போது இரண்டு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனை எதிரே வந்தபோது திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

இதனை அறிந்த மற்ற மாணவர்களும் இந்த மோதலில் ஈடுபட்டனர். இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு தாக்கி கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவல் அறிந்து வந்த போலீசார் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை தடுத்து கலைந்து போக செய்தனர். 

மாணவர்களின் இந்த செயலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story