மக்களாட்சி தத்துவத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள்தான் நம்பிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்களாட்சி தத்துவத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள்தான் நம்பிக்கை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சென்னை,
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற மாநகராட்சி மேயர் நிர்வாகப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
மக்களாட்சி தத்துவத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள்தான் நம்பிக்கை. மக்களுக்காக மக்களுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருக்க வேண்டும். மக்களோடு இருங்கள், மக்களுக்காக இருங்கள், இதையே பேரறிஞர் அண்ணா அறிவுறுத்தியுள்ளார்.
முதல் முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் நான் தான். உனக்கு மக்கள் கொடுத்தது மேயர் பதவி இல்லை, மேயர் பொறுப்பு என மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி என்னிடம் தெரிவித்தார். அவர் கூறியதுபோல் நீங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
பெரும்பாலான மேயர், நகர்மன்ற தலைவர்கள் இளம் வயதினராக இருக்கின்றனர். உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவியாக நினைக்காமல் பொறுப்பாக கருதி செயல்பட வேண்டும். மக்களாட்சி தத்துவத்தின் மகத்தான வளர்ச்சியை எட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Related Tags :
Next Story