பண்டிகை காலம்; நெல்லை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு


பண்டிகை காலம்; நெல்லை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு
x
தினத்தந்தி 13 April 2022 7:00 PM IST (Updated: 13 April 2022 7:00 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை,

தமிழ் புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு நெல்லை மலர் சந்தையில் பூக்களின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ, இன்று 800 ரூபாய் வரை விற்கப்படுகிறது. 

அதே போல், பிச்சி பூ கிலோ 1,500 ரூபாய்க்கும், கனகாம்பரம் 600 ரூபாய்க்கும், சம்பங்கி பூ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பண்டிகை காலத்தை முன்னிட்டு பூக்களின் விற்பனையும் அதிகரித்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   

Next Story