புதுச்சேரி- காரைக்காலில் மீன்பிடி தடைகாலம்
புதுவை, காரைக்காலில் மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
புதுவை, காரைக்காலில் மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
மீன்பிடி தடைக்காலம்
மீன்களின் இனவிருத்திக்காக மத்திய-மாநில அரசுகள் ஆண்டு தோறும் மீன்பிடி தடைகாலம் ஒன்றை நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மீன்பிடி தடை காலம் நாளை (வியாழக் கிழமை) நள்ளிரவு முதல் தொடங்குகிறது.
கிழக்கு கடற்கரை பகுதிகளில் உள்ள புதுச்சேரி, காரைக்கால் பகுதி மீனவர் களுக்கும் இந்த தடைகாலம் பொருந்தும். அதன்படி, இன்று நள்ளிரவு தொடங்கும் மீன்பிடி தடைகாலம் வருகிற ஜூன் 14-ந் தேதி நள்ளிரவு வரை அமலில் இருக்கும்.
இது குறித்து புதுவை மீன்வளத்துறை சார்பு செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
நாளை நள்ளிரவு முதல்...
கடல்சார் மீன்வளங்களை நீண்ட காலத்துக்கு நிலை நிறுத்தும் வகையில் பாதுகாத்திட கடந்த ஆண்டுகளில் கவர்னரின் உத்தரவின்படி நடைமுறைப்படுத்தியதுபோல் இந்த ஆண்டும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ( நாளை நள்ளிரவு முதல்) ஜூன் 14-ந் தேதி வரையிலான கால அளவில் 61 நாட்கள் (இரு நாட்கள் உள்பட) மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி புதுவை பிரதேச கிழக்கு கடல் நெடுகில் கனகசெட்டிகுளம் மீனவ கிராமம் முதல் மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம் மீனவ கிராமம் வரையிலும், காரைக்காலில் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலும் மற்றும் ஏனாம் மீன்பிடி பகுதியை உள்ளடக்கிய இடங்களிலும் பாரம்பரிய மீன்பிடி படகுகளான கட்டுமரம், நாட்டு படகுகளை தவிர அனைத்து வகை படகுகள் குறிப்பாக இழுவலை கொண்டு விசைப்படகில் மீன்பிடிப்பது தடை செய்யப்படுகிறது.
இதேபோன்று மாகி பகுதியில் ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் ஜூலை 31-ந்தேதி வரை 61 நாட்களும் மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருவதையொட்டி வரும் நாட்களில் மீன்களின் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story