மாணவர்களுக்கு தரமற்ற உணவு வினியோகம்


மாணவர்களுக்கு தரமற்ற உணவு வினியோகம்
x
தினத்தந்தி 13 April 2022 9:06 PM IST (Updated: 13 April 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு தரமற்ற உணவு வினியோகம் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர்.

கிருமாம்பாக்கம் அரசு பள்ளியில் இன்று மாணவர்களுக்கு புளிசாதமும், உருளைகிழங்கு பொரியலும் வழங்கப்பட்டது. இதில் உருளைகிழங்கு கெட்டுப்போய் இருந்தது. இதனால் பல மாணவர்கள் சாப்பிடவில்லையாம். 
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து, தரமற்ற உணவு வழங்குவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கும்,   பொறுப்பாளருக்கும்  தெரிவிப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், ‘அரசு பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவில் தினமும் ஏதாவது பிரச்சினை இருந்து வருகிறது. சில நாட்களில் சாப்பாடு கெட்டுப்போனது தெரியாமல் சாப்பிடும் மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. எனவே, இ்தில் அரசு தலையிட்டு தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Next Story