இளைஞர்கள் வாய்ப்புகளை தேடிச்செல்ல வேண்டும்


இளைஞர்கள் வாய்ப்புகளை தேடிச்செல்ல வேண்டும்
x
தினத்தந்தி 13 April 2022 11:00 PM IST (Updated: 13 April 2022 11:00 PM IST)
t-max-icont-min-icon

வாய்ப்பு எங்கு இருக் கிறதோ அங்கு தேடிச்செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு கவர்னர் தமிழிசை சவுந்தர ராஜன் அறிவுரை கூறினார்.

வாய்ப்பு    எங்கு  இருக் கிறதோ அங்கு தேடிச்செல்ல வேண்டும் என்று இளைஞர்களுக்கு கவர்னர் தமிழிசை  சவுந்தர ராஜன் அறிவுரை கூறினார்.

வேலைவாய்ப்பு பயிற்சி

இந்திய அரசு ஊரக வளர்ச்சி அமைச்சரகம், புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சி துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி மையம், ஊசுட்டேரி லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி சார்பில் தீன் தயால் உபாத்யாயா கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் தொடக்க விழா இன்று லட்சுமிநாராயணா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. விழாவில் கவர்னர் தமிழிசை    சவுந்தரராஜன் கலந்து கொண்டு மாணவர் களுக்கு கையடக்க கணினி மற்றும் உபகரணங்கள் வழங்கி பயிற்சி   வகுப்புகளை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வாய்ப்புகளை தேடி...
மாணவர்களுக்கு வேலை வழங்குவதை விட அவர்கள் 10 பேருக்கு வேலைகொடுக்க இந்த பயிற்சி ஏதுவாக இருக்கும். பயிற்சிக்கு கட்டணம் வாங்கும் நிலையில், தற்போது இலவச பயிற்சி அளித்து அதற்கு ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் மாணவர்கள், கிராமப்புற இளைஞர்கள் அதிகம் பயன்பெறுவார்கள். வாய்ப்புகள் எங்கு இருக்கிறதோ அங்கு தேடிச்சென்று இளைஞர்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

சபாநாயகர் செல்வம்

விழாவில் சபாநாயகர் செல்வம், பாரத் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் சந்தீப் ஆனந்த், சார்பு துணை வேந்தர் சுரேஷ், கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயலட்சுமி, மருத்துவ கண்காணிப்பாளர் ஆசியா போஸ்கோ சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
2 ஆண்டுகள் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும்          இளைஞர் களுக்கு சீருடைகள், உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.    மேலும்  பயிற்சி யுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது   என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story