வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து...!
தமிழ் புத்தாண்டையொட்டி தனது வீட்டின் முன் குவிந்திருந்த ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தார்.
சென்னை,
சித்திரை மாதம் முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘பிலவ’ ஆண்டு விடைபெற்று ‘சுப கிருது’ புத்தாண்டு பிறந்துள்ளது.
தமிழ் புத்தாண்டு, சித்திரை திருநாளான இன்று தமிழர்கள் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையில், தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தனது வீட்டின் வாசலுக்கு இன்று வந்த நடிகர் ரஜினிகாந்த் வாசலுக்கு வெளியே நின்றுகொண்டிருந்த ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்தை பார்த்த ரசிகர்கள் ‘தலைவா... தலைவா...’ கோஷம் எழுப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
— Superstar Fans Club (@Rajini_RFC) April 14, 2022
தலைவா @rajinikanth 🤘#Thalaivar169 | #Superstar | #Rajinikanthpic.twitter.com/lF5ZFdyv1E
Related Tags :
Next Story