கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குருபகவான்...!


கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்த குருபகவான்...!
x
தினத்தந்தி 14 April 2022 11:45 AM IST (Updated: 14 April 2022 11:32 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற குருபகவான் கோவில் உள்ளது.  திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்ற இந்த கோவில் நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. 

இந்த கோவிலில் ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது.

விழாவில் குருபகவான் கும்பராசியில் இருந்து அதிகாலை 4:16 மணிக்கு மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்த குருபகவானை தரிசனம் செய்தனர். 


Next Story