இறைச்சி கடைகள் மூடலா? - சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சி கடைகள் மூடப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சி கடைகள் மூடப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மகாவீர் ஜெயந்தியன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும். அதேபோல் இந்தாண்டும் மூடப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், அது குறித்து விளக்கம் அளித்துள்ள மாநகராட்சி அதிகாரிகள், ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இன்று இறைச்சி கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், மாநகராட்சியின் மற்ற பகுதிகளில் இறைச்சி கடைகள் செயல்பட தடையில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story