அழகர் மலையில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் புறப்பட்டார் அழகர்...!
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ளது.
மதுரை,
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை நிகழ்வான மீனாட்சி அம்மன் -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது.
மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
இந்நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு, வரும் 16 ஆம் தேதி நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்காக அழகர் மலையில் இருந்து கள்ளர் திருக்கோலத்தில் அழகர் இன்று மதுரை நோக்கி புறப்பட்டார். பக்தர்கள் புடைசூல கூட்டத்தின் நடுவே கள்ளழகர் புறப்பட்டார். மதுரைக்கு வரும் வழியில் வழிநெடுகிலும் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருவார் என கூறப்படுகிறது.
அழகர் கோயில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story