மேலும் ஒருவருக்கு கொரோனா


மேலும் ஒருவருக்கு கொரோனா
x
தினத்தந்தி 14 April 2022 11:25 PM IST (Updated: 14 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மேலும் ஒருவருக்கு கொரோனா

புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 200 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் காரைக்கால் பகுதியில் ஒருவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது 3 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
முதல் தவணை தடுப்பூசியை 781 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 1,174 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 173 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 61 ஆயிரத்து 305 தடுப்புசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story