பேனர் சரிந்து விழுந்து பெண் காயம் ஆஸ்பத்திரியில் அனுமதி
நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் சென்னையில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
சென்னை,
நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் சென்னையில் உள்ள பல்வேறு தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. அண்ணாசாலை போலீஸ் எல்லையில் உள்ள சத்யம் தியேட்டரிலும் திரையிடப்பட்டுள்ளது. அங்கு நேற்று வக்கீல் கவுதம் என்பவர் தனது மனைவி மோனிகா ஸ்ரீதேவியுடன் படம் பார்க்க சென்றிருந்தார். படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது, வாசலில் வைக்கப்பட்டிருந்த அலங்கார வரவேற்பு பேனர் திடீரென்று சரிந்து விழுந்தது.
அதில் சிக்கி மோனிகா ஸ்ரீதேவி காயம் அடைந்தார். அவர் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாசாலை போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
சென்னை எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் எல்லை பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் ‘பீஸ்ட்’ பட டிக்கெட்டுகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக, விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story