மதுரை மீனாட்சி அம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
மதுரை,
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் கொரோனா தொற்று தடுப்புக்காக கோவிலின் உள்ளேயே திருக்கல்யாணம் பக்தர்களுக்கு அனுமதியின்றி நடந்தது. ஆனால், இந்த ஆண்டுக்கான விழாவுக்கு வழக்கம்போல் விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்ததால் மதுரை நகரமே விழாக்கோலத்தில் காணப்படுகிறது.
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தையொட்டி கோவிலுக்குள் வடக்கு-மேற்கு ஆடி வீதி சந்திப்பில் ரூ.20 லட்சம் செலவில் சுமார் 2 ஆயிரத்து 500 கிலோ எடையில் பலவண்ணப் பூக்களால் திருமண மேடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மீனாட்சிக்கு மணப்பெண் அலங்காரம்
நேற்று அதிகாலையில் மீனாட்சி அம்மன், மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்டார். அவர் தங்க கவசம் அணிந்து, சிவப்பு கேரா நிறத்தில் சேலை உடுத்தி, வைரக்கிரீடம் சூடி, மாணிக்க மூக்குத்தி, வைரமாலை, தங்க அங்கி, ஒட்டியானம் அணிந்திருந்தார். சுந்தரேச பெருமான் வெண்பட்டும், பிரியாவிடை பச்சை பட்டும் உடுத்தி எழுந்தருளினார்.
காலை 10 மணிக்கு மேல் விநாயகர் பூஜையுடன் திருமண சடங்குகள் தொடங்கின. சுந்தரேசுவரருக்கு வெண்பட்டால் ஆன பரிவட்டமும், அம்மனுக்கு பட்டுப்புடவையால் ஆன பரிவட்டமும் கட்டப்பட்டன. பவளக்கனிவாய்ப் பெருமாள் தன் தங்கை மீனாட்சியை, சுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார்.
திருமாங்கல்யம் அணிவிப்பு
பின்பு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க திருமாங்கல்யத்தை பட்டர்கள் மூன்று முறை பக்தர்கள் முன்பு எடுத்துக்காட்டினார்கள். காலை 10.51 மணியளவில் தேவர்கள் வாழ்த்த, வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் நாதசுரம் இசைக்க மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தார்கள். பெண்கள் தாங்கள் அணிந்திருந்த தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டனர். ஏராளமான பெண்கள் புதிய மங்கல நாண் மாற்றி அணிந்து கொண்டார்கள்.
மணக்கோல காட்சி
திருக்கல்யாணம் முடிந்ததும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசப்பெருமானும் சற்று நேரம் மேடையில் இருந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கோவிலுக்குள் இருக்கும் பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு வந்தனர்.
திருக்கல்யாண மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி-அம்மனின் மணக்கோல காட்சியை தரிசித்தனர். சித்திரைத்திருவிழாவின் 11-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
கள்ளழகர் புறப்பாடு
மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நிறைவடையும் நிலையில், அழகர்மலையில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு நேற்று மாலை புறப்பட்டார்.
வழிநெடுக உள்ள சுமார் 450 மண்டகப்படிகளில் எழுந்தருளும் அழகர் நாளை ( 16-ந் தேதி) அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார்.
இதைக் காண, தமிழகம் முழுவதும் இருந்து பல லட்சம் பக்தர்கள் மதுரையில் வந்து குவிகிறார்கள்.

Related Tags :
Next Story