“தொலைதூர கல்வி விவகாரத்தில் விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்” - அண்ணாமலை பல்கலைக்கழகம்


“தொலைதூர கல்வி விவகாரத்தில் விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும்” - அண்ணாமலை பல்கலைக்கழகம்
x
தினத்தந்தி 15 April 2022 8:44 AM IST (Updated: 15 April 2022 8:45 AM IST)
t-max-icont-min-icon

தொலைதூர கல்வி இயக்ககம் நடத்தும் படிப்புகள் குறித்து விரைவில் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பழமைவாய்ந்த பல்கலைக்கழகமாக அண்ணாமலை பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் சமீபத்தில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொலைதூர கல்வி மூலம் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொலைதூர கல்வி மூலம் இங்கு வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை என அறிவித்தது. அதன் காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு பல்கலைக்கழகம் தான் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்தது. 

இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை பதற்றத்தை நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தற்போது சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்ககம் நடத்தும் படிப்புகள் குறித்து விரைவில் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இயக்ககம் மூலமாக 2015 ஆம் ஆண்டு முதல் பல்வேறு 2021 ஆண்டு வரை பல்வேறு வகையான படிப்புகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இந்த படிப்புகள் அங்கீகரிக்கப்படவில்லை என பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டது பல்கலைக்கழகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் சுமூக தீர்வு எட்டப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் கூறியுள்ளது. 

Next Story