ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளி நீர்வீழ்ச்சி...!
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
கொடைக்கானல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே அவ்வப்போது மிதமான மழையும், மாலை வேளைகளில் கனமழையும் வெளுத்து வாங்கி வருகிறது.
குறிப்பாக கொடைக்கானல் நகர்ப்பகுதி மற்றும் கொடைக்கானல் மேல்மலைப்பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக கொடைக்கானலில் இருக்கக்கூடிய முக்கிய அருவிகளான வெள்ளி நீர்வீழ்ச்சி ,வட்டக்கானல் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது குளுகுளு சீசன் நிலவிவரும் நிலையில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரைப் பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story