தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்...!


தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழப்பு - 3 பேர் படுகாயம்...!
x
தினத்தந்தி 15 April 2022 10:15 AM IST (Updated: 15 April 2022 10:56 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே தனியார் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்து உள்ளார்.

அந்தியூர், 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அண்ணா மடுவு பகுதியை சேர்ந்த விவேகானந்தர் மனைவி திவ்யா. இவருக்கு கடந்த 12-ம் தேதி தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

மருத்துவமனையில் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால் திவ்யா தனது குழந்தையுடன் ஆம்புலன்ஸ் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு டாக்டர்கள் அனுப்பி வைத்து உள்ளனர்.

கணவன் விவேகானந்தன் அவரது பெரியம்மா அய்யம்மாள் உடன் சென்று உள்ளனர். இவர்கள் வந்த ஆம்புலன்ஸ் ஈரோடு அருகே பருவாச்சி என்றயிடத்தில் வரும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதனை அறிந்த அப்பகுதியினர் விரைந்து வந்து ஆம்புலன்சில் சிக்கியிருந்தவர்களை மீட்டு 108  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் செல்லும் வழியிலேயே பெரியம்மா அய்யம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். கணவன் விவேகானந்தன், ஆம்புலன்ஸ் டிரைவர் மாபு பாஷா மற்றும் தனியார் மருத்துவமனை நர்ஸ் ஜோதிமணி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக  திவ்யாவுக்கும் அவரது குழந்தைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

இந்த விபத்து குறித்து அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story