தொடர் விடுமுறையால் திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!
தொடர் விடுமுறை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
கன்னியாகுமரி,
தொடர் விடுமுறை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
தமிழ் வருடப்பிறப்பு, புனிதவெள்ளி மற்றும் வார விடுமுறையின் காரணமாக அருவியில் குளிப்பதற்காக சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். நீர்வீழ்ச்சியில் குளித்தும், படகு சவாரி செய்தும், சுற்றுலாப்பயணிகள் உற்சாகத்துடன் கானப்படுகின்றனர்.
தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story