ஆடல், பாடல் நிகழ்ச்சியில் போலீசார் மீது தாக்குதல்
அரியாங்குப்பத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சியின்போது போலீசாரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
அரியாங்குப்பத்தில் ஆடல், பாடல் நிகழ்ச்சியின்போது போலீசாரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
ஆடல், பாடல் நிகழ்ச்சி
அரியாங்குப்பம் பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு விழா நாட்களில் இரவு நேரத்தில் ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. சம்பவத்தன்று நடந்த நிகழ்ச்சியின் போது உற்சாக மிகுதியில் தன்னை மறந்து மேடையேறி வாலிபர் ஒருவர் நடன குழுவினருடன் சேர்ந்து ஆடினார்.
இதனை பார்த்த பொதுமக்கள், அந்த வாலிபரை கீழே இறங்குமாறு கூறினர். அதனை அவர் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார்.
இதனை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை மேடையை விட்டு வலுக்கட்டாயமாக கீழே இறக்க முயற்சித்தனர். மேலும் அவர் மற்றொரு வாலிபருடன் சேர்ந்து போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
அண்ணன்-தம்பி கைது
இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு கலாட்டா செய்த 2 பேரையும் மடக்கி பிடித்து அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையில் அவர்கள் அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியைச் சேர்ந்த ஏசுராஜன் (வயது 25), அவரது அண்ணன் ஜீசஸ் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஆடல், பாடல் நிகழ்ச்சியின்போது போலீசார் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story