கொரோனா பாதித்த 3 பேருக்கு தொடர் சிகிச்சை
புதுவையில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லாத நிலையில் 3 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 28 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போது காரைக்கால் பகுதியில் தொற்று பாதித்த 3 பேர் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று முதல் தவணை தடுப்பூசியை 16 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 50 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 11 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 61 ஆயிரத்து 420 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story