தனியார் பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்


தனியார் பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்
x
தினத்தந்தி 15 April 2022 11:18 PM IST (Updated: 15 April 2022 11:18 PM IST)
t-max-icont-min-icon

சிறப்பு பஸ்கள் இயக்காததால் தனியார் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.

சிறப்பு பஸ்கள் இயக்காததால் தனியார் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்கின்றனர்.

சிறப்பு பஸ்கள்

புதுச்சேரியில் கடந்த காலங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வசதிக்காக அரசு சார்பில் ஒரு ரூபாய் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்சில் எங்கு வேண்டுமானாலும் ஏறி, இறங்கலாம். இது கிராமப்புற மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. 
கொரோனா ஊரடங்குக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புறங்களில் இருந்து நகர பகுதியில் படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தினமும் தனியார் பஸ்சில் கட்டணம் செலுத்தி வந்து செல்கின்றனர்.

ஆபத்தான பயணம்

காலை, மாலை நேரங்களில் பஸ்களில் கூட்டம் அலைமோதுவதால் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதை காண முடிகிறது. இதில் மாணவிகளின் நிலைமை மிகவும் மோசம். 
குறிப்பாக புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு சென்ற தனியார் பஸ்சில் வில்லியனூர், அரியூர், கண்டமங்கலம், திருவண்டார்கோவில் ஆகிய பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கூட்ட நெரிசலால் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி செல்கின்றனர். 
பஸ்சில் கூட்டம் குறைந்த பிறகு கண்டக்டர், மற்ற பயணிகள் அழைத்தும் உள்ளே வர மறுத்து படிக்கட்டிலேயே மாணவர்கள் பயணம் செய்கின்றனர்.
எனவே மாணவர்களின் நலன்கருதி சிறப்பு பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story