நரிக்குறவ மாணவி வீட்டில் கறி விருந்து சாப்பிட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நரிக்குறவ மாணவி வீட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கறி விருந்து சாப்பிட்டார்.
சென்னை,
சென்னை ஆவடி பருத்திப்பட்டில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்த பள்ளி மாணவிகள் திவ்யா, பிரியா, தர்ஷினி ஆகியோர், நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அரசு பள்ளி உள்பட பல இடங்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக பேசிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவிகள் திவ்யா, பிரியா, தர்ஷினி ஆகியோரை தலைமைச்செயலகத்துக்கு நேரில் அழைத்து பேசினார்.
அப்போது, மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆவடி நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்று, அங்கு வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களை சந்தித்து பேசினார். அப்போது, சா.மு.நாசரின் செல்போன் மூலம் வீடியோ அழைப்பில் தோன்றிய மு.க.ஸ்டாலின், நரிக்குறவ மக்களிடம் குறைகளை கேட்டதோடு, மாணவிகளிடமும் பேசினார்.
கறி விருந்து
வீடியோ அழைப்பில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘உங்களை சந்திப்பதற்கு இன்னும் ஒரு வாரத்தில் ஆவடிக்கு நேரில் வருகிறேன். அப்போது உங்களுடைய குறைகளை எல்லாம் கேட்டு அதனை நிவர்த்தி செய்வேன். நான் உங்கள் வீட்டுக்கு வந்தால் எனக்கு சோறு போடுவீர்களா?’’ என கேட்டார். அதற்கு மாணவிகள், ‘‘கண்டிப்பாக கறி சோறு போடுகிறோம். எங்கள் குடியிருப்புக்கு நீங்கள் வந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்’’ என்றனர்.
ஆவடியில் நரிக்குறவர் குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்ட மு.க.ஸ்டாலின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரை, மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். குறவர் இனத்தை சேர்ந்த மாணவி தர்ஷினியின் வீட்டுக்கு மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். அங்கு முதலாவதாக அவர் காபி குடித்தார். காபி குடித்துக்கொண்டு இருக்கும்போதே பெண் ஒருவர், அய்யா உங்களுக்காக இட்லி, வடை, சாம்பார், சட்னி மற்றும் நாட்டுக்கோழி கறி எல்லாம் சமைத்து வைத்திருக்கிறேன், சாப்பிடுங்கள் என்றார். குறவர்களின் அடையாளங்களில் ஒன்றாக திகழும், பாசி மணி மாலைகளை கழுத்தில் அணிந்திருந்த மு.க.ஸ்டாலின் ஏதாவது ஒன்னு கொடுங்கள் பார்ப்போம் என்றார்.
ருசித்து சாப்பிட்டார்
உடனே மகிழ்ச்சியில் செய்வதறியாது திகைத்த அந்த பெண், ஒரு தட்டில் 2 இட்லி, மெது வடையை வைத்தார். இட்லியை தொட்டு சாப்பிடுவதற்கு தேங்காய் சட்னி, கார சட்னி, சாம்பார் உடன் நாட்டுக்கோழி குழம்பையும் ஊற்றி மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தார். அந்த பெண் அன்போடு கொடுத்த காலை உணவினை வாங்கிய மு.க.ஸ்டாலின் ருசித்து சாப்பிட்டார். இதனை பார்த்து மெய்சிலிர்த்து நின்ற அந்த பெண், இது தனக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், அருகே நின்றுக்கொண்டிருந்த சிறுமிக்கும் ஊட்டி விட்டார். உணவில் காரம் சற்று தூக்கலாக இருந்தது. காரம் அதிகமாகத்தான் வைத்து நீங்கள் சாப்பிடுவீர்களா? என்று மு.க.ஸ்டாலின், அந்த பெண்ணிடம் கேட்டார். அதற்கு பதில் அளித்த அந்த பெண், காரம் அதிகமாக சாப்பிட்டால் சளி, ஜூரம் இருக்காது, கொரோனா கூட வராது என்று பதில் அளித்தார். தொடர்ந்து இட்லியை சாப்பிட்ட மு.க.ஸ்டாலின் கறி நன்றாக இருக்கிறது என்றார்.
குவியும் பாராட்டுகள்
சாப்பிட்டு முடித்த உடன் அந்த பெண், மு.க.ஸ்டாலினிடம் தட்டை வாங்க முயற்சி செய்தார். ஆனால் தான் சாப்பிட்ட தட்டை பாத்திரம் கழுவும் இடத்தில் அவரே கொண்டுபோய் வைத்தார். பின்னர் கைகழுவிவிட்டு அந்த பெண் கொடுத்த தண்ணீரை குடித்தார். மாணவி திவ்யாவின் கோரிக்கையை ஏற்று அவருடைய வீட்டில் மு.க.ஸ்டாலின் சாப்பிட்டார். இதன்மூலம் மாணவியின் வேண்டுகோளை, மு.க.ஸ்டாலின் நிறைவு செய்து வைத்திருக்கிறார். குறவர் இனத்தவர் வீட்டில் காலை உணவு சாப்பிட்ட மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Tags :
Next Story