குழித்துறை கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிய கைதி கைது
குழித்துறை கோர்ட்டில் இருந்து தப்பி ஓடிய கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய கைதியை போலீசார் மடக்கி பிடித்தனர்.
களியக்காவிளை:
கேரள மாநிலம், இஞ்சி விளை பாறசாலை பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் மீது கேரள மற்றும் தமிழகம் உட்பட பல மாவட்டங்களில் கொலை மற்றும் அடிதடி திருட்டு என பல வழக்குகள் உள்ளது.
திருவனந்தபுரம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த இவர் மீது மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் உள்ள ஒரு வழக்கு விசாரணைக்காக குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.
அப்போது பாபு திடீரென போலீசாரை தாக்கி விட்டு தப்பி சென்றார். இதையடுத்து பாபுவை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாகர்கோவில் பகுதியில் பாபு பதுங்கி இருப்பதாக களியக்காவிளை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் சென்ற போலீசார் நாகர்கோவில், இருளப்பபுரம் பகுதியில் பதுங்கி இருந்த பாபுவை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
பின்னர் பாபுவிடம் மேற்கொண்ட விசாரணையில் பாபு குழித்துறை கோர்ட்டில் இருந்து தப்பித்து பஸ் மூலமாக நாகர்கோவிலுக்கு வந்ததாக தெரிவித்தார். மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாபு பிடிபட்ட தகவல் கேரள போலீசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பாபுவை கேரள போலீசாரிடம் களியக்காவிளை போலீசார் ஒப்படைக்க உள்ளனர்.
Related Tags :
Next Story