தலித் அமைப்பினரின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு
தலித் அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா கூறினார்.
தலித் அமைப்பினரின் கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி விரைவில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் சந்திரபிரியங்கா கூறினார்.
கோரிக்கை
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்காவை காரைக்காலில் பல்வேறு தலித் அமைப்பின் நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது அவர்கள், காரைக்கால் கோயில்பத்து பகுதியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, பராமரிப்பு பணி என கடந்த பல ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. இதுவரை அங்கு ஒரு பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை. அதனால், அந்த விடுதியை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். சிறப்புக் கூறு நிதியை தலித் மக்களின் வளர்ச்சிக்காக மட்டும் செலவிட வேண்டும். நீதிமன்றத்தில் அம்பேத்கர் படம் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கும் இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். காரைக்கால் திருநகரில் உள்ள சமுதாய நலக் கூடத்தை தலித் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். ஆதிதிராவிடர்துறைக்கு உரிய அதிகாரியை நியமிக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
விரைவில் தீர்வு
தொடர்ந்து பேசிய அமைச்சர் சந்திர பிரியங்கா, அனைத்து கோரிக்கைகளையும், முதல்-அமைச்சரிடம் எடுத்துக்கூறி விரைவில் தீர்வு காணப்படும். என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story