மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கில் 2 மாதங்களுக்கு பிறகு வாலிபர் கைது..!
புதுச்சேரியில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி, பாகூர் அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த சுமார் 66 வயதுள்ள பெண் ஒருவர் கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி, தென்பெண்ணை ஆற்றிங்கரையோம் உள்ள தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வயலில் வேலை பார்த்த மூதாட்டியிடம் உங்களிடம் செல்போன் இருந்தால் கொடுங்கள் என கேட்டுள்ளார்.
அந்த மூதாட்டியும் தனது செல்போனை கொடுத்துள்ளார். அந்த வாலிபர் செல்போனில் பேசுவது போல் நடித்து கொண்டே கீழே கிடந்த ஒரு உருட்டு கட்டையை எடுத்து அவரது கழுத்தில் பலமாக தாக்கினார்.
இதில் மயங்கி விழுந்த மூதாட்டியை அந்த வாலிபர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு தப்பிச் சென்றார். மூதாட்டியின் உறவினர்கள், அவரை மீட்டு, புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமணையில் அனுமதித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். 2 மாதங்களாக நடைபெற்று வந்த விசாரணையில், சந்தேகத்தின் பேரில் துாக்கனாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (வயது 25) மதிக்கதக்க வாலிபரை பாகூர் போலீசார் பிடித்தனர்.
ஏற்கனவே அவன் மீது தமிழக பகுதியில் கொலை, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story