தூத்துக்குடி: உடன்குடியில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.10-க்கு கொள்முதல் - விவசாயிகள் கவலை...!
உடன்குடியில் ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.10-க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
உடன்குடி,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் முருங்கைக்காய் ஒரு கிலோ ரூ. 10-க்கு வாங்குவதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில்,
உடன்குடி வட்டார பகுதியில் முருங்கை விவசாயம் அதிக அளவில் நடந்துவருகின்றது . பனைமரத்து தோட்டம், தென்னை மர தோட்டங்களில் விவசாயிகள் முருங்கை விவசாயம் செய்கின்றனர்
தற்போது முருங்கை வேகமாக வளர்ந்து கொத்துக் கொத்தாய் காய்க்கும் சீசன் வந்துவிட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு பெய்த மழையால் முருங்கைகாய் எல்லாம் பழுப்பு நிறம் கலந்த கருப்பு நிறமாக மாறிவிட்டது.
இதனால் இந்த முருங்கைகாய்களை வெளி ஊர்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியவில்லை. மேலும், உடன்குடி பகுதியில் பழுப்பு நிற முருங்கக்காய் ஒரு கிலோ ரூ. 10-க்கு மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
இத்தகைய முருங்கைக்காயை யாரும் வாங்குவதும் இல்லை என்பதால் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. சிலர் தோட்டங்களில் காய்களை பறிக்காமல் போட்டு விட்டனர். இன்னும் சில தோட்டங்களில் முருக்காய் வேண்டும் என்றால் நீங்களே எங்க தோட்டத்தில் வந்து இலவசமாக பறித்து செல்லுங்கள் என்று விவசாயிகள் சொல்லுகிறார்கள்.
முருங்கைகாய் பச்சை நிறத்தில் மாறும் வரை வெளியூருக்கு ஏற்றுமதி செய்ய முடியாது. அதுவரை விலையும் கூடாது என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story